உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண் பலாத்காரம்: மூவர் மீது வழக்கு

பெண் பலாத்காரம்: மூவர் மீது வழக்கு

ஆண்டிபட்டி : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி ஜோஸ் மரியராகுல் 28. இவர் ஆண்டிபட்டி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவியிடம் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழகி, காதலித்து வந்தார். தாய், தந்தை இருவரையும் இழந்த இளம் பெண் சின்னமனுாரில் உள்ள தனது பாட்டி கண்காணிப்பில் இருந்தார். கடந்தாண்டு நவ.20ல் ஜோஸ் மரிய ராகுல், கல்லுாரி மாணவியை வைகை அணைக்கு வரவழைத்தார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பூங்காவில் மறைவான இடத்தில் அவரை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதவிர மாணவியின் பாட்டி வீட்டிற்கு சென்று பலாத்காரம் செய்துள்ளார். கல்லுாரி மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தினார். ஆனால் அதற்கு ஜோஸ் மரிய ராகுல் மறுப்பு தெரிவித்தார். மாணவி, தனது பாட்டியுடன் நியாயம் கேட்டு ஜோஸ் மரிய ராகுல் வீட்டிற்கு சென்றார். இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை தரக்குறைவாக திட்டி உதாசீனப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி புகாரில் ஜோஸ் மரிய ராகுல், அவரது பெற்றோர் ஜேசுராஜ், ஜெயா புஷ்பம் ஆகியோர் மீது ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி