உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கலெக்டர் ஆபீசில் பெண் தர்ணா

கலெக்டர் ஆபீசில் பெண் தர்ணா

தேனி; தேனி கலெக்டர் ஆபீசில் கலெக்டர் கார் நிறுத்தும் இடத்திற்கு அருகே பெண் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டார். அவர் கொண்டு வந்த பையை போலீசார் சோதனை செய்த போது அதில் பாட்டிலில் பெட்ரோல் இருந்ததை கைப்பற்றினர். அதிகாரிகளிடம் அவரை அழைத்து சென்றனர். போலீஸ் விசாரனையில் அந்த பெண் தேவாராத்தை சேர்ந்த சாந்தி என தெரிந்தது. அவர் கூறுகையில், 'நான், எனது கணவர் மாரியப்பனும் சேர்ந்து டாக்டர் ஒருவரின் தோட்டத்தை எடுத்து கவனித்து வந்தோம். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. குத்தகை உரிமத்தையும் நில உரிமையாளர் வைத்துக்கொண்டு மிரட்டுவதாக,' தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி