உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி ஐ.டி.ஐ., அருகே திட்டசாலை பயன்பாட்டிற்கு வர பணிகள் தீவிரம்

தேனி ஐ.டி.ஐ., அருகே திட்டசாலை பயன்பாட்டிற்கு வர பணிகள் தீவிரம்

தேனி, : தேனி மேம்பால பணிகளுக்காக அரசு ஐ.டி.ஐ., அருகே உள்ள திட்டசாலையை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.தேனி மதுரை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.90.02 கோடியில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகிறது.இப்பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், போதிய அளவில் மாற்றுப்பாதை இல்லாததால் நகர்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் சுப்பன்செட்டிதெரு- அரண்மனைப்புதுார் விலக்கு, அரசு ஐ.டி.ஐ., அருகே உள்ள திட்டசாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தப்பட்டது. மாற்றுப்பாதை இல்லாததால் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.அரசு ஐ.டி.ஐ., அருகே 87 சென்ட் நிலத்தில் 2019-2020ம் ஆண்டில் ரூ.49.50 லட்சம் செலவில் ரோடு அமைக்கப்பட்டது. தனியார் சிலர் இடம் கொடுக்காததால் பணி நிறைவந்தும் பயன்பாடு இல்லாமல் இருந்தது. தற்போது கலெக்டர் அறிவுறுத்தலில் தேனி அரசு ஐ.டி.ஐ., அருகே உள்ள திட்ட சாலையை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அப்பகுதியில் தனியார் நில உரிமையாளர்கள் ரோடு பணிக்கு இடம் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.அரசு ஐ.டி.ஐ., வளாகத்தில் செயல்படும் விடுதியின் ஒரு பகுதியை அகற்றி விட்டுரோடு அமைக்க பணிகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை