உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலரில் விழுந்த தொழிலாளி பலி

டூவீலரில் விழுந்த தொழிலாளி பலி

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமணி 70. மஞ்சளாறு அணையில் மீன் பிடி தொழிலாளி. இவர் தனது நண்பர் வீரணன் 68. என்பவருடன் டூவீலரில் தேவதானப்பட்டி சென்று மளிகை பொருட்களை வாங்கி மஞ்சளாறு அணைக்கு சென்று கொண்டிருந்தனர். டூவீலரை ஜெயமணி ஓட்டினார். தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை ரோடு, கடுக்காய்பாறை பாலூத்து அய்யனார் கோயில் முன்பு நிலைதடுமாறி டூவீலர் விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெயமணி, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். வீரணன் காயத்துடன் தப்பினார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !