உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி : தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்', என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் துணைத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், சி.ஐ.டி.யு., மாவட்டத் தலைவர் ஜெயபாண்டி, மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் சண்முகம் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி