உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கர்ப்பிணிகள், நோயாளிகளை பாதிக்கும் மஞ்சள் கோடு வேகத்தடைகள்

கர்ப்பிணிகள், நோயாளிகளை பாதிக்கும் மஞ்சள் கோடு வேகத்தடைகள்

கூடலுார்: கூடலுாரில் இருந்து கம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஏராளமான மஞ்சள் கோடு வேகத்தடைகளால் கர்ப்பிணிகள், நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கூடலுாரில் இருந்து கம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 8 கி.மீ., தூரம் கொண்டதாகும். தனியார் மகளிர் கல்லூரி, அப்பாச்சி பண்ணை என முக்கிய இடங்கள் உள்ளன. வாகனங்கள் அதிவேகத்தை கட்டுப்படுத்த 20க்கும் மேற்பட்ட இடத்தில் மஞ்சள் கோடு வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையில் வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்துவதில்லை. இதனால் வாகனங்கள் சேதமடைவதுடன் வாகனங்களில் செல்பவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலை உள்ளது. முதுகுத்தண்டு பாதிப்பு உள்ளவர்கள் மெதுவாக சென்றாலும் இந்த வேகத்தடையால் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கேரளாவில் இருந்தும், கூடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தும் கர்ப்பிணிகளை ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு, தேனி மருத்துவக் கல்லூரிக்கும் கொண்டு செல்வது அதிகரித்துள்ளது. வேகமாக செல்லும்போது கர்ப்பிணிகளுக்கும், நோயாளிகளுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முக்கிய இடங்களில் உள்ள ஒரு வேகத்தடையை மட்டும் தவிர்த்து, மற்ற இடங்களிலும் உள்ள வேகத்தடைகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !