உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி : மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலம் தொழிற்சாலைகளில் 3 முதல் 6 மாத அடிப்படை பயிற்சி, ஈராண்டு வரையிலான தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கான சிறப்பு முகாம் ஜன.20ல் தேனி அரசு ஐ.டி.ஐ., வளாகத்தில் நடக்கிறது. இதில் ஐ.டி.ஐ.,களில் தேர்ச்சி பெற்ற, பெறாத அனைத்து பயிற்சியாளர்கள், 8, 10ம் வகுப்பு, பிளஸ் 2க்கு மேல் படித்தவர்கள் பங்கேற்கலாம். பயிற்சியை முடிப்பவர்களுக்கு தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியின் போது மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.8050 வழங்கப்படும். தகுதி உள்ளவர்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !