மேலும் செய்திகள்
மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
13-Apr-2025
தேனி : சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் ஏப்.1 முதல் மார்ச் 31 2025 வரை மேற்கொள்ளப்பட்ட சேவை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 16 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்திருக்க வேண்டும். இதற்கான சான்றிதழ் இணைக்க வேண்டும். மத்திய மாநில அரசு பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்க இயலாது. விருது பெற விரும்புவோர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.inஎன்ற இணையத்தளத்தில் மே 3 மாலை 4:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
13-Apr-2025