உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜீவன் ரக் ஷா பதக் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

ஜீவன் ரக் ஷா பதக் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி: மத்திய அரசு சார்பில் நீரில் மூழ்கியவர்கள், தீ விபத்துக்கள், மின்சாரம் தாக்குதல், நிலச்சரிவுகள், விலங்கு தாக்குதல்களில் இருந்து மனிதர்களை மீட்டவர்களக்கு ஜீவன் ரக் ஷா பதக் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது சர்வோத்தம் ஜீவன் ரக் ஷா பதக், உத்தம் ஜீவன் ரக் ஷா பதக், ஜீவன் ரக் ஷா பதக் ஆகிய 3 பிரிவுகளில் வழங்கப்படுகிறது. தகுதி உடையவர்கள் https:// theni.nic.inஎன்ற இணையத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து ஜூலை 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் சுயவிபரக்குறிப்பு, 2024 அக்.,1க்கு பின் மீட்பு சாதனைகள், நடத்தை சான்று, பத்திரிக்கை செய்தி ஆகியவற்றுடன் சமூக நலத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !