உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நன்னிலம் மகளிர் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

நன்னிலம் மகளிர் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

தேனி : தாட்கோ மூலம் நிலமற்ற ஆதிதிராவிடர்,பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்க நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நிலத்தின் சந்தை மதிப்பீட்டில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 5 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. வாங்கப்படும் நிலத்திற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள், பதிவு கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இந்த திட்ட பயனாளிகளுக்கு இந்தியன் ஒவர்சீஸ் வங்கி குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது. நிலம் வாங்க விரும்புவோர் www.newsscheme.tahdco.comஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தை நேரில் அல்லது 94450 29480 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி