மேலும் செய்திகள்
நெல் சாகுபடி விளைச்சல் போட்டி; பங்கேற்க அழைப்பு
08-Aug-2025
தேனி : மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர். வேளாண் துறையினர் கூறியதாவது: ஒவ்வொரு பயிரிலும் அதிக மகசூல் எடுக்கும் விவசாயிக்கு தமிழக அரசு சார்பில் விருது, பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. போட்டியாளர் குறைந்த பட்சம் 2 ஏக்கர் பரப்பில் பயிர் சாகுபடி செய்திருக்க வேண்டும். அறுவடை தேதியில் பெறப்பட்ட சாகுபடி அடிப்படையில் பரிசு அறிவிக்கப்படும். ஒரே பயிரை மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு பதிவு செய்ய கூடாது. ஒரு முறை பரிசு வென்ற விவசாயிகள் 3 ஆண்டுகளுக்கு இப்போட்டியில் பங்கேற்க கூடாது. இப்போட்டியில் நெல், நிலக்கடலை, கரும்பு, சோளம், பருத்தி,கம்பு, மக்காச்சோளம், உளுந்து, பச்சைபயறு, துவரை பயிர் சாகுபடி செய்து போட்டியில் பங்கேற்போர் நுழைவு கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். அறுவடையின் போது மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்கள் கண்காணிப்பார்கள். மாவட்ட அளவில் வெற்றி விபரங்களை வேளாண் இணை இயக்குநர் அறிவிப்பார்.போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி விண்ணப்பிக்கலாம் என்றனர்.
08-Aug-2025