உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நுண்ணீர், சொட்டுநீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

நுண்ணீர், சொட்டுநீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

தேனி : தோட்டக்கலைத்துறை சார்பில் ஆதிதிராவிடர் விவசாயிகளின் 760 எக்டேர் நிலத்திற்கு நுண்ணீர் பாசம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக ரூ. 6.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிறு குறு விவசாயிகளுக்கு நுாறு சதவீத மானியம், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. நுண்ணீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் கடந்திருந்தால் உபகரணங்கள் மாற்றிக்கொள்ள விண்ணப்பிக்கலாம். இது தவிர தானியங்கி அமைப்புடன் சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் ரூ.18ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. விரும்பமுள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங்தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ