உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போதைப்பொருள் விற்ற வாலிபர் பெங்களூருவில் கைது

போதைப்பொருள் விற்ற வாலிபர் பெங்களூருவில் கைது

கம்பம் : கம்பத்தில் கடந்த வாரம் தடை செய்த போதை பொருளான மெத்தபெட்டமைன் வைத்திருந்த வாலிபர் கைதான நிலையில், அவரது வாக்குமூலத்தில் கம்பம் போலீசார் பெங்களூரு சென்று, ஒசகல்வி பகுதியை சேர்ந்த ஜேசன்கிறிஸ்டோபரை 21,கைது செய்து ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 16 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருளை கைப்பற்றி விசாரிக்கின்றனர். கம்பம் பைபாஸ் ரோட்டில் தெற்கு எஸ்.ஐ., தேவராஜ் தலைமையில் போலீசார் செப்.7ல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனை செய்தனர். அவரது சட்டைப் பையில் அரசால் தடை செய்த 2 கிராம் 10 மில்லி அளவுள்ள மெத்தபெட்டமைன் என்னும் போதைப் பொருள் இருந்தது கண்டறிந்து, அதனை கைப்பற்றினர். அதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். அந்த வாலிபர் கம்பம் காமாட்சியம்மன் கோயில் தெரு ஆனந்தன் மகன் சாருகேஷ் 19 என, தெரிந்தது. இவர் தனியார் கல்லுாரி ஒன்றில் பட்டப்படிப்பு 3ம் ஆண்டு படித்து வருவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. வாலிபர் தனது வாக்குமூலத்தில் மெத்தபெட்டமைனை பெங்களூருவில் இருந்து வாங்கியதாக தெரிவித்திருந்தார். கம்பம் தெற்கு போலீசார் வாலிபரை கைது செய்தனர். இந்நிலையில் எஸ்.பி., சினேஹாபிரியா உத்தரவில் கம்பம் தெற்கு எஸ்.ஐ தேவராஜ் தலைமையிலான தனிப்படையினர் பெங்களூருவில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். பெங்களூரு ஒசகல்வி பகுதியை சேர்ந்த ஜேசன் கிறிஸ்டோபர் 21, என்ற வாலிபர்தான் கம்பம் வாலிபருக்கு போதைப் பொருள் சப்ளை செய்ததை உறுதிப்படுத்தி அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 16 கிராம் மெத்தபெட்டமைன் கைப்பற்றி, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை