உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளி மாணவியை மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது

பள்ளி மாணவியை மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 10 ம் வகுப்பு 15 வயது மாணவி, சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். பெரியகுளம் தாலுகா, சில்வார்பட்டி வடக்கு தெரு சேர்ந்தவர் ரத்தினேஷ்வரன் 22. மாணவியை பின் தொடர்ந்து வம்பு செய்துள்ளார். மாணவி பள்ளி வளாகத்தில் சென்றுள்ளார். ரத்தினேஷ்வரன் சுவர் ஏறி குதித்து மாணவியை மிரட்டியுள்ளார். அங்கு வந்த தலைமையாசிரியர் பாண்டியனை பார்த்தவுடன் ரத்தினேஷ்வரன் தப்பி ஓடினார். மாணவியின் பெற்றோர் புகாரில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, ரத்தினேஷ்வரன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை