உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வாகனம் மோதி இளைஞர் பலி

வாகனம் மோதி இளைஞர் பலி

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகபாண்டி 25. தேங்காய் வெட்டும் தொழிலாளி. உறவினர் வீட்டிற்கு செல்வதற்கு நண்பரிடம் டூவீலர் வாங்கிக்கொண்டு கெங்குவார்பட்டிக்கு சென்றார். திரும்பி வரும் போது காட்ரோடு பிரிவு அருகே அடையாளம் தெரியாத வாகனம் முருகபாண்டி மீது மோதியது. பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர் முருகபாண்டி இறந்து விட்டதாக தெரிவித்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !