உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளத்தில் பணம் கேட்டு இளைஞருக்கு கத்திக்குத்து

பெரியகுளத்தில் பணம் கேட்டு இளைஞருக்கு கத்திக்குத்து

பெரியகுளம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் வைரமுத்து 23. கேரளாவில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து விட்டு கைலாசபட்டி வந்துள்ளார். தனது நண்பர்களான பால்துரை, செல்லத்துரையுடன் காய்கறிக்கடை அருகே பேசிக்கொண்டிருந்தார். அப்போது வைரமுத்துவுக்கு அறிமுகமான சருத்துப்பட்டி மேற்கு தெரு கிருஷ்ணன், வெங்கடேஷ், கார்த்திக் ஆகியோர் வைரமுத்துவிடம் பணம் கேட்டுள்ளனர். பணம் இல்லை என கூறியதால் கிருஷ்ணன், வெங்கடேஷ், கார்த்திக் ஆகியோர் கத்தியால் வைரமுத்துவை குத்தி கோலை மிரட்டல் விடுத்தனர். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் வைரமுத்து அனுமதிக்கப்பட்டார். தென்கரை போலீசார் கிருஷ்ணன் உட்பட மூவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ