மேலும் செய்திகள்
திசை மாறும் இளைஞர்களுக்கு அணை போடும் தி.மு.க.,
17-Sep-2024
கம்பம், : நகரங்களில் மெயின் ரோடுகளிலும் டூவீலர்களில் அதிவேகமாக சென்று பொதுமக்களையும், வாகன ஒட்டிகளையும் அச்சுறுத்தும் இளைஞர்களுக்கு கடிவாளம் போட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டங்களை இணைக்கும் ரோடுகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஒட்டிகள், வாகனங்களை வேகமாக ஒட்டிச் செல்கின்றனர். சமீப காலங்களில் விபத்துக்களில் உயிரிழப்போர், உடல் உறுப்புக்களை இழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விபத்துக்களை கட்டுப்படுத்த ஹெல்மெட் அணிய வலியுறுத்தி, போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.இருந்த போதும் நகர் பகுதிகளில் டூவீலர்களில் அதிக சத்தத்துடன் அதிவேகத்தில் செல்கின்றனர். போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள கம்பம், சின்னமனுார் மெயின் ரோடுகளில் இளைஞர்கள் சாகச பயணம் செல்வதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் பொது மக்களும், பிற வாகன ஓட்டுவோர் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது.அதிவேகத்தில் சாகச பயணம் செய்யும் வாகனங்களை பறிமுதல் செய்து இளைஞர்களுக்கு கடிவாளம் போட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக 'சைலன்சர்'களை மாற்றி அதிக சத்தம் எழுப்ப உதவும் மெக்கானிக் ஷாப்புகளையும் எச்சரிக்கை செய்ய வேண்டும். இல்லையென்றால் விபத்துக்கள் மேலும் அதிகரித்து பல உயிரிழப்புக்கள் ஏற்படும்.
17-Sep-2024