உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மாநகராட்சி அனுமதி பெறாத 12 கடைகளுக்கு சீல் வைப்பு

மாநகராட்சி அனுமதி பெறாத 12 கடைகளுக்கு சீல் வைப்பு

திருநெல்வேலி:திருநெல்வேலியில் மாநகராட்சிஅனுமதி இன்றி கட்டப்பட்ட 12 கடைகள் கொண்ட வணிக வளாகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்திருநெல்வேலியில் மாநகராட்சி அனுமதியின்றி 200 கட்டடங்கள், வணிக வளாகங்கள்,உள்ளூர் திட்ட குழுமத்தின் (எல்.பி.ஏ.,) அனுமதி இன்றி 68 கட்டடங்கள் உள்ளன. இது தொடர்பாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் 2024 நவம்பரில் 4 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.மேலப்பாளையம் அலங்கார் தியேட்டர் அருகே அனுமதி பெறாமல் ஹபீப் என்பவர் கட்டிய தனியார் வணிக வளாகம் அதிகாரிகளின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கட்டடத்தின் தரைத்தளத்தில் 6 கடைகள், முதல் தளத்தில் 6 கடைகள் என மொத்தம் 12 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி