வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டார்ச் துடுப்பு கெடச்சிடுச்சி
மேலும் செய்திகள்
நெல்லை வாலிபர் சிக்கினார்
17 minutes ago
மின் கம்பங்கள் முறிந்து விழுந்து பசு, கன்று பலி
36 minutes ago
சேரன்மகாதேவியில் கனமழை வாழை, நெற்பயிர் சேதம்
23 hour(s) ago
திருநெல்வேலி : திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் இறந்து கிடந்த இடத்தில் எரிந்த நிலையில் டார்ச் லைட் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் 58. மே 4ல் எரிந்த நிலையில் கரைசுத்துபுதூரில் உள்ள அவரது வீட்டு தோட்டத்தில் இறந்து கிடந்தார். அவர் உடலை சுற்றி இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டு இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரித்தனர்.ஜெயக்குமாரின் உடல் கிடந்த தோட்டத்தில் தடயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மே 2 இரவில் அவர் காரில் வெளியே சென்ற போது திசையன்விளை கடையில் டார்ச் லைட் வாங்கியது தெரிய வந்தது. அவர் இறந்து கிடந்த இடத்தில் எரிந்து போன டார்ச் லைட் மீட்கப்பட்டுள்ளது. அவரது இறப்பில் ஆரம்பத்தில் இருந்தே சில சந்தேகங்கள் வலுத்து வருகின்றன. அதில் டார்ச் லைட் வாங்கிய வீடியோ வெளியாகி இருந்தது. அதனை சம்பவ இடத்தில் ஆரம்பகட்டத்திலேயே போலீசார் மீட்கவில்லையா. 8 நாட்களுக்குப் பிறகு தற்போது தான் டார்ச்லைட் கிடைத்ததா எனவும் சந்தேகம் நிலவுகிறது. இதனிடையே அவரது குடும்பத்தினரிடம் நேற்றும் விசாரணை நடந்தது.
டார்ச் துடுப்பு கெடச்சிடுச்சி
17 minutes ago
36 minutes ago
23 hour(s) ago