உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கண்டித்த லாரி உரிமையாளரை கொலை செய்த டிரைவர் கைது

கண்டித்த லாரி உரிமையாளரை கொலை செய்த டிரைவர் கைது

திருநெல்வேலி,:கடலுாரைச் சேர்ந்தவர் பிரியமுருகன், 45. இவர், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கண்டிகைபேரியில் குடும்பத்துடன் வசித்தார். சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்தார். இவரிடம் வள்ளியூர் நம்பியான்விளையைச் சேர்ந்த வசந்தகுமார், 25, என்பவர் டிரைவராக வேலை பார்த்தார்.நேற்று முன்தினம் இரவு, இருவரும் வள்ளியூர் குளக்கரையில் மது அருந்தினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், வசந்தகுமார் பிரியமுருகனை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றார். கத்திக்குத்து காயமடைந்த அந்த நபர் இறந்தார்.

காரணம்

வசந்தகுமார் லாரி வாடகை பணத்தை முறையாக கொடுக்கவில்லை. இதை பிரியமுருகன் கண்டித்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. கொலையாளி வசந்தகுமாரை, வள்ளியூர் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஆக 24, 2024 08:34

பொது இடத்தில் டாஸ்மாக் பானத்தை அருந்தியதே தப்பு , இதில் கொலையும் ? ஆஹா ஆஹா விடியலை நோக்கி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை