உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மணிமுத்தாறு அருவியில் பயணிகள் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் பயணிகள் குளிக்க அனுமதி

திருநெல்வேலி:மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் இன்று முதல் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மலைப்பகுதியில் அணைக்கு முன்னதாக நீர்வரத்து உள்ள அருவி உள்ளது. மாஞ்சோலை எஸ்டேட்டுக்கு செல்லும் வழியில் உள்ள மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பது வழக்கம்.கடந்த டிசம்பரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது இங்கு தடுப்பு கம்பிகள், பலகைகள் அடித்துச் செல்லப்பட்டன. தற்போது சீரமைப்புக்கு பிறகு இன்று முதல் சுற்றுலா பயணிகள் காலை 8:00 மணி முதல் மதியம் 3:00 மணிவரை குளிக்க அனுமதிக்கப்படுவர் என வனத்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ