உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கூடங்குளம் அருகே பெட்ரோல் குண்டுவீச்சு: 2 பேர் கைது

கூடங்குளம் அருகே பெட்ரோல் குண்டுவீச்சு: 2 பேர் கைது

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே முன்விரோதத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கூடங்குளம் ஆவரைகுளம் அருகே சௌந்தரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கும் முன்விரோதம் இருந்தது. இதில் ஏற்பட்ட தகராறில் மணியின் உறவினர் விஜயனுக்கும் ராமகிருஷ்ணன் மகன் சாமிதுரைக்கும் 21, தகராறு ஏற்பட்டது. விஜயன் புகாரின் பேரில் சாமிதுரை மீது கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில் பிப்.,21 அதிகாலையில் விஜயன் வீட்டின் மீது சரமாரி பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எந்த சேதமும் இல்லை. கூடங்குளம் போலீசார் விசாரித்தனர். சாமிதுரை, அவரது நண்பர் ஹரிகரனை 21, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ