மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:திருநெல்வேலியில் சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் மேலப்பாளையத்தை சேர்ந்த முள்ளான் செய்யது அலி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.திருநெல்வேலி மார்க்கெட் சம்பக் கடை தெருவை சேர்ந்தவர் பெர்டின் ராயன் 35. மே 4ம் தேதி திருநெல்வேலி தெற்கு ஐகிரவுண்ட் சாலையில் பேட்மிண்டன் கிளப்பிற்கு காரில் வந்த போது இவரை வழிமறித்த நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். பெர்டின் ராயன் தற்போது சிகிச்சையில் உள்ளார்.திருநெல்வேலி மேலப்பாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த முறைகேடான பத்திரபதிவுகள் குறித்து புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். இதில் ஏற்பட்ட முன்விராதத்தில் பெர்டின் ராயன் வெட்டப்பட்டார். இக்கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் தாஜுதீன் 25, நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலப்பாளையத்தைச் சேர்ந்த முள்ளான் செய்யது அலி 48, முஸாம்பில் முர்ஜித் 19, அப்துல் அஜீஸ் 30 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான முள்ளான் செய்யது அலி மீது ஏற்கனவே அச்சன்புதூர், மேலப்பாளையம் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளன. எனவே அவரை ஒரு ஆண்டுக்கு வெளிவர முடியாதபடி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவிட்டார். உதவி கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர் முத்துராஜ் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
29-Sep-2025
25-Sep-2025