உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வக்கீல் கைதுக்கு எதிர்ப்பு சபாநாயகர் கார் முற்றுகை

வக்கீல் கைதுக்கு எதிர்ப்பு சபாநாயகர் கார் முற்றுகை

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு பத்திரப்பதிவுகள் முத்திரை கட்டணத்தை குறைத்து காண்பித்து பதிவு செய்யப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது குறித்து சமூக செயற்பாட்டாளர் பெர்டின் ராயன் பத்திரப்பதிவுத் துறையில் புகார் செய்தார். இதனால மே 4ல் அவர் ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டார்.இந்த கொலை முயற்சி வழக்கில் ஏழு பேர் மீது ஐகிரவுண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திண்டுக்கல்லை சேர்ந்த தாஜுதீன், 25, ஷாகுல் ஹமீது, 25 மற்றும் மேலப்பாளையத்தை சேர்ந்த முல்லன் சையது அலி, 45, முசாமில், 19, அப்துல் அஜீஸ், 30, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில், தேடப்பட்ட வழக்கறிஞர் நயினார் முகமது, 40, என்பவரை திருநெல்வேலி மாநகர உதவி கமிஷனர் பிரதீப் தலைமையிலான போலீசார் நேற்று தென்காசியில் கைது செய்தனர்.நயினார் முகமதுவை விடுவிக்கக்கோரி திருநெல்வேலி கோர்ட் முன், திருநெல்வேலி - -துாத்துக்குடி சாலையில் அமர்ந்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு விழாவில் பங்கேற்று, அவ்வழியே துாத்துக்குடி சென்ற சபாநாயகர் அப்பாவு கார் முன் அமர்ந்து அவர்கள் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து வழக்கறிஞர்கள் சிலர் மண்ணெண்ணெய் கேன்களுடன் தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் மிரட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

S R George Fernandaz
ஜூலை 27, 2024 11:40

மண்ணெண்ணெய் ஐ விட பெட்ரோல் தான் நல்லது. பூச்சாண்டி காட்டாமல் போய் பெட்ரோல் வாங்கி ஊத்தி சாவுங்கடா .....லே


Kanns
ஜூலை 27, 2024 11:28

Better they burnt themselves Instead of SelfImmolation Dramas


நிக்கோல்தாம்சன்
ஜூலை 27, 2024 09:21

மதம் சார்ந்து இயங்கும் நீங்களெல்லாம் வழக்கறிஞர்களா இந்த வழக்கறிகனர்கள் இழிவு படுத்திவிட்டனர்


மேலும் செய்திகள்



புதிய வீடியோ