உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / டாஸ்மாக் கடையில் திருட்டு

டாஸ்மாக் கடையில் திருட்டு

திருநெல்வேலி:திருநெல்வேலி தச்சநல்லுார் வடக்கு பைபாஸ் சாலை அருகில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. மேற்பார்வையாளர் ஆனந்தன் நேற்று காலை 11.30 மணிக்கு கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் திருடப்பட்டிருந்தன. சி.சி.டி.வி.காட்சிகளில் ஒரு நபர் பூட்டை உடைத்து இவற்றை திருடிச் செல்லும் காட்சிகள் இருந்தன. தச்சநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை