வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த கேடுகெட்ட பேனர் கலாச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
திருநெல்வேலி:திருநெல்வேலியில் டிஜிட்டல் பேனரை தூக்கிச்சென்ற போது மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். மற்றொருவர் காயமுற்றார்.திருநெல்வேலியில் பல்வேறு நிறுவனங்களின் விளம்பர பேனர்களை பொருத்தும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதில் கங்கைகொண்டான் ராஜபதி கிருஷ்ணன்கோயில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பேச்சிமுத்து 30, வேலை செய்தார். நேற்று மதியம் குலவணிகர்புரம் ரயில்வே கேட் அருகே சாலையோரம் டிஜிட்டல் பேனர்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அவருடன் ராஜபதியைச் சேர்ந்த சதீஷ்முருகனும் 30, வேலை செய்தார்.அப்போது மின்சார டிரான்ஸ்பார்மர் அருகே வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனரை வேறு இடத்திற்கு மாற்ற இருவரும் பேனரை தூக்கினர். அப்போது மேலே சென்ற மின்சார கம்பியில் பேனரின் இரும்பு கம்பி உரசியதால் மின்சாரம் தாக்கி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பேச்சிமுத்து பரிதாபமாக இறந்தார். அவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். காயமுற்ற சதீஷ் முருகன், சிகிச்சையில் உள்ளார்.
இந்த கேடுகெட்ட பேனர் கலாச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்.