உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 10 கொலைகள் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 10 கொலைகள் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

திருநெல்வேலி; ரூ.350 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையம் ஜூலை 26ம் தேதி மாலையில் பாரத பிரதமரால் திறந்து வைக்கப்படும் என பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகிகளோடு திருநெல்வேலியில் பா.ஜ.,அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் ஆலோசனை மேற்கொண்டார். பூத் கமிட்டி மற்றும் தமிழகம் வரும் பிரதமரை வரவேற்பது, உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை மற்றும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரூ 350 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தை ஜூலை 26ம் தேதி மாலை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இனி இரவிலும் விமான சேவை நடக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என தொடர்ந்து தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஜெயலலிதா பா.ஜ., உடன் கூட்டணி வைக்கும் போது அன்வர்ராஜா அ.தி.மு.க.வில் தான் இருந்தார். இப்போது அவருக்கு என்ன பிரச்னையோ கட்சி மாறி உள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி., சுந்தரேசன் 1800 வழக்குகள் பதிவு செய்துள்ளார். அனுமதியற்ற மது கடைகளுக்கு சீல் வைத்துள்ளார். தமிழகத்தில் தர்மபுரி, கரூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 10 கொலைகள் நடைபெற்றுள்ளது. கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் அதிகாரிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார். அவரது செயல்பாடுகளே தி.மு.க., வை வீட்டிற்கு அனுப்பிவிடும். கல்லூரி வாசல்களில் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் மாணவர்களை கட்சியில் இணைப்பதற்காக சென்றிருக்க மாட்டார்கள் கஞ்சா விற்பனை செய்வதற்காக சென்றிருப்பார்கள். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி