வ.உ.சி., மணிமண்டப மோதல் சிறுவன் உட்பட 3 பேர் கைது: மேலும் மூவருக்கு வலை
திருநெல்வேலி: திருநெல்வேலி டவுனில் உள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் நடந்த மோதல் தொடர்பாக சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். வ.உ.சிதம்பரனாரின் 90வது நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலி டவுனில் உள்ள மணிமண்டபத்தில் மாலை அணிவிக்க வந்த இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது செருப்பு வீச்சு, பேரிகார்டுகள் உடைப்பு, கைகலப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தன. மணிமண்டபத்தில் இருந்த பொருட்களும் சேதப்படுத்தப்பட்டன. சம்பவம் தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சஞ்சய் நேரில் விசாரணை நடத்தி, சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி மோதலில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் அனுப்பம்பட்டியைச் சேர்ந்த அழகர் 30, பாலமுருகன் 22, மற்றும் ஒரு சிறுவன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில அமைப்புச் செயலாளர் அன்னலட்சுமி உட்பட மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.