உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பேராசிரியரை தாக்கிய 4 மாணவர்கள் கைது

பேராசிரியரை தாக்கிய 4 மாணவர்கள் கைது

திருநெல்வேலி:இன்ஜினியரிங் கல்லுாரி துணை பேராசிரியரை தாக்கிய நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஸ்காட் இன்ஜினியரிங் கல்லுாரியில் மின்னணுவியல் துறை துணை பேராசிரியராக சாமுவேல் ராஜ், 37 என்பவர் பணியாற்றுகிறார். சமீபத்தில் கல்லுாரி மாணவ - மாணவியரை இண்டஸ்ட்ரியல் சுற்றுலாவிற்கு கேரள மாநிலம், மூணாறு அழைத்துச் சென்றார். அவர் ஒரு மாணவியிடம் தகாத முறையில் நடந்ததாக சர்ச்சை எழுந்தது. ஆனால், மாணவியர் யாரும் புகார் தரவில்லை. சுற்றுலா சென்று வந்த பின்னர், கல்லுாரியில் வைத்து மாணவர்கள் சிலர் அவரை தாக்கினர். சாமுவேல் ராஜ் சேரன்மகாதேவி போலீசில் புகாரளித்தார். அதன்படி, சுஜின், 19, ஷேக் முகமது மைதீன், 20, முத்துராஜ், 20, ஸ்ரீதர், 20, ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அைத்தனர். மாணவர்கள் கைதை கண்டித்து மற்ற மாணவர்கள் கல்லுாரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ