மேலும் செய்திகள்
சேரன்மகாதேவியில் கனமழை வாழை, நெற்பயிர் சேதம்
05-Oct-2025
திருநெல்வேலி:திருநெல்வேலிமாவட்டம் சேரன்மகாதேவி அருகே கூனியூர் அருணாசலம் (எ) குமார் பாண்டியன் 48, அ.தி.மு.க.,வில் மாவட்ட பிரதிநிதியாகவும், அவரது மனைவி கீதா, அப்போது சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத் தலைவியாகவும் இருந்தனர்.2013 ல் பொறியாளர் சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டதை அடுத்து, இரு தரப்பி னருக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டது. அதே ஆண்டின் ஆக. 22 ல் குமார் பாண்டியன் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில், ஆறுமுக நயினார் மற்றும் ஆறுமுகதாஸ் விசாரணை நடந்த போதே இறந்தனர். விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வம் நேற்று தீர்ப்பளித்தார். இதில், சங்கர் 46, அருணாச்சலம் 42, முருகன் 44, லட்சுமணன் 44, ராஜேஷ் 37 ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
05-Oct-2025