மேலும் செய்திகள்
ஒண்டி வீரன் 254வது குருபூஜை விழா
21-Aug-2025
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரியை சேதப்படுத்திய விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலியில் ஆக.,20ல் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254வது நினைவு தின நிகழ்வு நடந்தது. பலரும் அவரது மணிமண்டபத்தில் நினைவஞ்சலி செலுத்த சென்றனர். கங்கைகொண்டான் அருகே ஒரு கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிவகாசி மீனம்பட்டியைச் சேர்ந்த முத்துவீரன் 22, பலியானார். இச்சம்பவத்தை தொடர்ந்து அடுத்தடுத்த வாகனங்களில் வந்தவர்கள் அங்கு பழுதாகி நின்ற லாரியை அடித்து சேதப்படுத்தினர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த கங்கைகொண்டான் போலீசார் விருதுநகர் மாவட்டம் மடத்துப்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து 19, சாத்தூர் துரைபாண்டி 24, கருப்பசாமி 20, கணேஷ் 20, வெற்றிவேல் 40, ஆகியோரை கைது செய்தனர். 18 வயதுக்குப்பட்ட சிறார்கள் இருவரிடமும் விசாரிக்கின்றனர்.
21-Aug-2025