பெண் ஏட்டு மண்டை உடைப்பு பெண் உட்பட 7 பேர் கைது
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வந்த இரு தரப்பினர் மோதிக் கொண்டு கம்பியால் தாக்கியதில் ஏட்டு ராமலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.திசையன்விளை அருகே நம்பிகுறிச்சியை சேர்ந்த ராஜேஷுக்கும் கனிஷ்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.கனிஷ்கர் தரப்பினர் மீது புகார் கொடுக்க நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு ராஜேஷ் தரப்பினர் திசையன்விளை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.அப்போது கனிஷ்கர் தரப்பினரும் ஸ்டேஷனுக்கு வந்தனர்.இருவரும் ஸ்டேஷனிலும் மோதிக்கொண்டனர். கனிஷ்கர் கையில் வைத்திருந்த கம்பியால் ராஜேஷ் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தினார்.அது தவறுதலாக இடையில் நின்ற ஏட்டு ராமலட்சுமியின் தலையை பதம் பார்த்தது. தலையில் பலத்த காயமடைந்த ராமலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ராஜேஷ், ஏட்டு ராமலட்சுமி ஆகியோரது புகாரின் பேரில் கனிஷ்கர், அவரது தந்தை இசக்கிமுத்து, தாயார் மாலதி, சகோதரர்கள் பிரவீன், ஹரி பிரசாத் உறவினர் ஸ்டீபன், ஒரு சிறுவன் ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.