உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திருநெல்வேலியில் மாடு மீது டூ வீலர் மோதியதில் வாலிபர் பலி

திருநெல்வேலியில் மாடு மீது டூ வீலர் மோதியதில் வாலிபர் பலி

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ரோட்டில் படுத்திருந்த மாடு மீது டூவீலர் மோதியதில் வாலிபர் பலியானார்.திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் ரோடுகளில் மாடுகள் திரிவது தொடர்கிறது. இரவு 7:00 மணிக்கு பிறகு ஆள் நடமாட்டம் குறைந்த ரோடுகளில் கால்நடைகள் முழுவதும் படுத்து விடுகின்றன. அதன் உரிமையாளர்கள் இதனை கண்டு கொள்வதில்லை. மாநகராட்சியும் இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.திருநெல்வேலி மேலநத்தத்தை சேர்ந்தவர் மகேஷ் 30; ஏ.டி.எம்., பழுது பார்க்கும் ஊழியர். இரவில் டூவீலரில் குறுக்குத்துறை ரோட்டில் வந்த போது அங்கு படுத்திருந்த மாடு தெரியாமல் அதன் மீது மோதியதில் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜங்ஷன் போலீசார் விசாரித்தனர்.

தொடரும் சம்பவம்

2024 ஜூன் 22ல் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் டூவீலரில் சென்று கொண்டிருந்த கோர்ட் ஊழியர் வேலாயுதராஜ் 58, மீது மாடுகள் சண்டையிட்டு மோதியதில் அவர் அரசு பஸ்சுக்குள் விழுந்து நசுங்கி பலியானார்.திருநெல்வேலி திருமால்நகர் கல்லுாரி மாணவி சுவாசிகா, 2024 அக்.22ல் தியாகராஜநகர் வழியே சென்றபோது மாடுகள் அவரது டூவீலரில் மோதி அவரை கீழே தள்ளியது. இதில் அவர் பலத்த காயமுற்றார்.இம்மாநகராட்சி பகுதியில் தொடர்ந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் கால்நடைகள் மீது மாநகராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை