சாகச பயண கார் பறிமுதல்
திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே காரில் மேல் தளத்தில் அமர்ந்தபடி ஆபத்தான முறையில் சாகச பயணம் மேற்கொண்ட சம்பவத்தில் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் நான்கு வழிச்சாலையில் மூன்றடைப்பு, பாணாங்குளம் ,நாங்குநேரி டோல்கேட் சாலையில், நேற்று முன்தினம் சென்னை பதிவெண் கொண்ட ஒரு காரில், இருவர் கதவை திறந்து கொண்டு வேகமாக செல்வதும், காரின் மேல் தளத்தில் அமர்ந்து சாகச பயணம் செய்வதுமாக இருந்தனர். இதனை மற்றொரு காரில் வந்தவர்கள் வீடியோ எடுத்தனர். வீடியோ வெளியானதால் நாங்குநேரி போலீசார் கார் உரிமையாளர் மீது மோட்டார் வாகன விதிமுறைகளை கடைபிடிக்காமல் ஓட்டியதற்காக வழக்கு பதிவு செய்தனர். போலீஸ் விசாரணையில் சென்னை பதிவெண் கொண்ட அந்த கார் துாத்துக்குடியை சேர்ந்தவருக்கு உரியது எனத்தெரிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட அந்த கார் நாங்குநேரி போலீஸ் ஸ்டேஷனில் உள்ளது.