உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / சூடு வைத்து பாலியல் துன்புறுத்தல் அ.தி.மு.க., பிரமுகர் மகன் கைது

சூடு வைத்து பாலியல் துன்புறுத்தல் அ.தி.மு.க., பிரமுகர் மகன் கைது

திருநெல்வேலி,:திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தை சேர்ந்தவர் முகமது மீரான்; அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு நிர்வாகி. குடிநீர் பாட்டில் சப்ளை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது மகன் முகமது சர்ஜின், நிறுவனத்தை கவனித்து வருகிறார். அங்கு பணியாற்றும் பெண்களிடம் சர்ஜின் தவறாக நடந்து கொள்வதாக, நிறுவனத்தில் பணிபுரியும், 35 வயது பெண், முகமது மீரானிடம் புகார் தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சர்ஜின், அந்த பெண்ணை வேலைக்கு வந்த இடத்தில் தாக்கி, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், திருநெல்வேலி மாநகர அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சர்ஜினை கைது செய்தனர்.சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது:முகமது மீரான் நடத்தி வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றி வருகிறேன். அவருக்கு தாழையூத்து மற்றும் திருநெல்வேலி டவுன் ஆகிய இடங்களில் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்ளன. முகமது சர்ஜின் அடிக்கடி சுத்திகரிப்பு ஆலைக்கு வருவார். அவர் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது குறித்து மீரானுக்கு தெரியவந்தது. இதற்காக மகனை முகமது மீரான் கண்டித்தார்.அதை நான் தான் அவரது தந்தையிடம் கூறியதாக நினைத்துக் கொண்டு, என்னை தாக்கி கொடுமைப்படுத்த திட்டமிட்டார். கடந்த, 13ம் தேதி இரவு பணி இருப்பதாக கூறி, என்னை டவுன் சுத்திகரிப்பு ஆலைக்கு டூ--வீலரில் அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் கதவை அடைத்து, என்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். சிகரெட்டால் சூடு வைத்தார். 'ஏன் என் தந்தையிடம் கூறினாய்' என கேட்டு, என்னை தாக்கினார். மிகவும் காயம்பட்ட நிலையில், எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் முதலில் புகார் கூற முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.சம்பவத்தில் ஈடுபட்ட முகமது சர்ஜின், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, உடலில் பல்வேறு இடங்களில் சிகரெட் சூடு வைத்ததோடு, அதை வீடியோவாகவும் எடுத்து வெளிநாடுகளில் வசிக்கும் தன் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். கொடூரமான இந்த சம்பவம் குறித்து பல்வேறு பிரிவுகளில் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sudha
ஜன 18, 2025 20:02

இந்நேரம் சிவசேனா மாதிரி இருந்தால் குடிநீர் சிறுநீராக மாறியிருக்கும்


Rajathi Rajan
ஜன 18, 2025 17:53

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தம்பதி, தங்களின், 16 வயது மகளையும், அவரின் தோழிகள் ஆறு பேரையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதை வீடியோ எடுத்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, விற்பனை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 18, 2025 14:35

யார் அந்த சார்? இதோ இரண்டாவது சார். இவரும் அதிமுக தான் என்பது விசேஷம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 18, 2025 14:21

மூர்க்கன் மூர்க்கனாகத்தான் இருப்பான் .....


Bahurudeen Ali Ahamed
ஜன 18, 2025 10:35

இவனுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும்


Mani . V
ஜன 18, 2025 05:55

இவனை என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்?


சமீபத்திய செய்தி