உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஆசிய யூத் தடகளம்: வெள்ளி வென்ற எட்வினா ஜேசனுக்கு வரவேற்பு

ஆசிய யூத் தடகளம்: வெள்ளி வென்ற எட்வினா ஜேசனுக்கு வரவேற்பு

திருநெல்வேலி: பஹ்ரைனில் நடந்த ஆசிய யூத் தடகளப்போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற திருநெல்வேலியை சேர்ந்த எட்வினா ஜேசனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயிலில் திரும்பிய அவரை திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உறவினர்கள், நண்பர்கள், விளையாட்டு வீரர்கள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் வரவேற்று தோளில் சுமந்து ஊர்வலமாக அழைத்து சென்றனர். 16 வயதான எட்வினா 55.43 வினாடிகளில் இலக்கை அடைந்து இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் பெற்றார். அவருக்கு மாலைகள், சால்வைகள் அணிவிக்கப்பட்டது. அப்போது எட்வினா பேசியதில், “என் பெற்றோர், பயிற்சியாளர்கள் மகேஷ், மூர்த்தி ஆகியோரின் ஆதரவால் இந்த வெற்றியைப் பெற்றேன். ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவது என் கனவு. பாராட்டிய முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிக்கு நன்றி,'' என்றார். பயிற்சியாளர் மகேஷ் கூறியதில், “2032 ஒலிம்பிக்கே எங்கள் இலக்கு. இந்த வெற்றி எங்கள் பயணத்தின் தொடக்கம்,” என்றார். விளையாட்டுக் கழக நிறுவனர் சுந்தரமூர்த்தி, “நாரணம்மாள்புரம் கிராமம் விளையாட்டில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் நாள் தூரத்தில் இல்லை” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை