உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பொன்முடி பேச்சு குறித்து மீண்டும் கேட்பது பத்திரிகை தர்மம் அல்ல சபாநாயகர் அப்பாவு கோபம்

பொன்முடி பேச்சு குறித்து மீண்டும் கேட்பது பத்திரிகை தர்மம் அல்ல சபாநாயகர் அப்பாவு கோபம்

திருநெல்வேலி : அமைச்சர் பொன்முடி மீது கட்சி நடவடிக்கை எடுத்து விட்டது. அவரைப் பற்றி மீண்டும் மீண்டும் கேள்வி கேட்பது பத்திரிகை தர்மம் அல்ல என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.திருநெல்வேலியில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமையில் நடந்த விழாவில் 9.62 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் 1,384 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இதில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசியது: சனாதனத்தின் அடிப்படை மக்களை பிறப்பின் அடிப்படையில் பிளவுபடுத்துவதுதான். இதைத்தான் துணை முதல்வர் விமர்சித்தார். சனாதனம் இந்திய அரசியல் அமைப்பல்ல. இந்திய அரசியல் அமைப்பு சமத்துவம், சமூகநீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இதனை மத்திய அரசும் கவர்னரும் ஏற்க மறுக்கிறார்கள்,.மேலும், காவிரி நீர்ப்பிரச்சனை, தேர்தல் ஆணையர் நியமனம் போன்ற பல்வேறு விஷயங்களில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மத்திய அரசு மதிக்கவில்லை. நீதிபதியை நீக்கி, சட்டத்துறை அமைச்சரை தேர்தல் ஆணையராக நியமித்தது நடுநிலையான செயலாக முடியாது. தீர்ப்பையே மதிக்காதவர்கள் நீதிமன்றத்தை என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை என்றார்.அமைச்சர் பொன்முடி பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது தொடர்பாக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து விட்டார். அந்த பேச்சில் யாருக்கும் உடன்பாடில்லை. நல்ல பிரச்னைகளை கேளுங்கள். நன்மை பயக்காதவற்றை மீண்டும் மீண்டும் கேட்பது பத்திரிகை தர்மத்திற்கு உகந்தது அல்ல என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sankaran
ஏப் 15, 2025 18:41

இவ்ளோ அசிங்கமா பேசிட்டு.. கேள்வி கேட்டாக்க பத்திரிகை தர்மம் அல்ல என்று வாய் கூசாமல் பதில் சொல்றார்.. சரியான தண்டனை கிடைக்கும் வரும் வரை... கேட்பதுதான் தர்மம்... கோர்ட்ல கேஸ் போடணும் ... ஒண்ணுமில்லா sv சேகர் விஷயத்துக்கு உச்ச கோர்ட் வரைக்கும் கேஸ்..


R.P.Anand
ஏப் 15, 2025 16:41

மண்ணை திருடி முடிச்சுட்டு மலய திருடி முடிச்சுட்டு இப்போ காட்டுக்கு வந்திருக்கான். அதுக்குள்ள எப்படி நீக்ரது. ஆனா ஒன்னு கரெக்டா கப்பம் கட்டிடுவன்


R.MURALIKRISHNAN
ஏப் 15, 2025 14:51

சபை நாயகன் இவன் சபாநாயகரல்ல


Yes your honor
ஏப் 15, 2025 14:40

தர்மம், ஞாயம் இவற்றைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு என்று ஒரு தகுதி வேண்டும். தர்மத்தைப் போதிக்கும் ஜீயர் ஸ்வாமிகளே கண்டனம் தெரிவிக்கும் இலட்சணத்தில் தான் இன்றைய திமுக அரசின் தகுதி இருக்கிறது. அந்த அரசவையையே தலைதாங்கும் இந்த அப்பாவுக்கு?


Sridhar
ஏப் 15, 2025 13:58

இவன் தோலை உரித்து உப்புக்கண்டம் போடணும். அப்போதான் கோவம் அடங்கும்.


Sridharan Venkatraman
ஏப் 15, 2025 13:12

தங்க முடிக்கு அப்பா மிகக் கடுமையான தண்டனை அளித்து விட்டார். அப்பாவு போன்றவர்கள் திருப்தி அடைந்தனர்.


V RAMASWAMY
ஏப் 15, 2025 09:29

நடவடிக்கை தர்ம அடிப்படையில் எடுத்திருந்தால் மீண்டும் கேட்கமாட்டார்கள். அதர்மத்தை எதிர்த்தால் அது எப்படி தர்மமாகாமலிருக்கும்?


Perumal Pillai
ஏப் 15, 2025 08:22

இவரே ஒரு மத வெறியர் .


VENKATASUBRAMANIAN
ஏப் 15, 2025 08:19

அப்பாவு உங்களிடம் படித்த மாணவர்களை நினைத்தால் பாவமாக உள்ளது. இதுமாதிரி பேச வெட்கமாக இல்லை. அமைச்சராகவே இருக்க தகுதியற்ற ஒருவரை அமைச்சராக வைத்திருப்பதே கேவலமான செயல். இதுமாதிரி பலமுறை வாய்க்கொழுப்பு பேசியுள்ளார். நீங்கள் நேர்மையானவராக இருந்தால் உடனே அவரை அமைச்சராக இருக்க அனுமதிக்க கூடாது. சிந்தியுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை