உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / போலி பத்திர பதிவுக்கு உதவி சார் பதிவாளர் சஸ்பெண்ட்

போலி பத்திர பதிவுக்கு உதவி சார் பதிவாளர் சஸ்பெண்ட்

திருநெல்வேலி:திருநெல்வேலி என். ஜி. ஓ., காலனியை சேர்ந்த சரவணனுக்கு சொந்தமான பூர்வீக நிலம் ஆணையர் குளம் பகுதியில் 21 சென்ட் உள்ளது. இதன் மதிப்பு ரூ.2 கோடிக்கு மேலாகும். கடந்த ஜூன் மாதம், அந்நிலத்தை கிருஷ்ணாபுரம் சேர்ந்த ராஜவேல் என்பவர், போலி ஆவணங்கள் தயாரித்து மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது ஜவஹர் அலிக்கு விற்றதாக சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தார். சம்பவம் குறித்து சரவணன் புகாரை தொடர்ந்து, பெருமாள்புரம் போலீசார் ராஜவேல், முகமது ஜவஹர் அலி, உடந்தையாக இருந்த முத்துப்பாண்டி, ஆனந்தவேல் மற்றும் மேலப்பாளையம் சார்பதிவாளர் காட்டுராஜா ஆகிய 5 பேர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்தனர். இதில் முத்துப்பாண்டி, முகமது ஜவஹர் அலி கைது செய்யப்பட்டனர். சார்பதிவாளர் காட்டு ராஜா,என். ஜி. ஓ., காலனி பகுதியில் அரசின் பல்வேறு ஓ.எஸ்.ஆர். நிலங்களை போலியான முறையில் பத்திரப் பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால், அவர் மேலப்பாளையத்திலிருந்து ஆடிட் பிரிவில் சாதாரணப் பொறுப்புக்கு மாற்றப்பட்டார். இதனிடையே இப்பிரச்னையில் நேற்று அவரை சஸ்பெண்ட் செய்து பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிட்டார். இதுபோல வங்கி முடக்கிய சொத்துக்களை போலி பத்திரப்பதிவு செய்து தந்தது தொடர்பாக கடலுார் பொறுப்பு சார் பதிவாளர் சுரேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை