கவின் ஆணவக்கொலையில் எஸ்.ஐ.,க்கு ஜாமின் மறுப்பு
திருநெல்வேலி:திருநெல்வேலியில் நடந்த மென்பொறியாளர் கவின் ஆணவக்கொலையில் கைதான எஸ்.ஐ., சரவணனுக்கு ஜாமின் வழங்க மாவட்ட கோர்ட் மறுத்து விட்டது. சென்னை டி.சி.எஸ்., நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றிய கவின் செல்வ கணேஷ் சுபாஷினி என்ற பெண்ணை காதலித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுபாஷினி சகோதரர் சுர்ஜித்தால் ஜூலை 27 திருநெல்வேலியில் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சுபாஷினியின் தந்தை சரவணன் (எஸ்.ஐ., ஆக உள்ளார்), தாய் கிருஷ்ணகுமாரி (இவரும் எஸ்.ஐ.,), தம்பி சுர்ஜித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுர்ஜித் மற்றும் தந்தை சரவணன் ஆகியோர் திருநெல்வேலி சிறையில் உள்ளனர். சரவணன் ஜாமின் கோரி மாவட்ட கோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது. வழக்கு விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் ஜாமின் வழங்குவது விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனக்கூறி நீதிபதி ஹேமா ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.