மேலும் செய்திகள்
தாயை அடித்துக் கொன்ற மகன், கணவனுக்கு 'கம்பி'
22-Jul-2025
மாயமான நபர் காரில் சடலமாக மீட்பு
17-Jul-2025
திருநெல்வேலி:திருநெல்வேலியில், மன உளைச்சலில் இருந்த வங்கி ஊழியர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். திருநெல்வேலி டி.வி.எஸ்., நகரை சேர்ந்த அரவிந்தன் மகன் சிவசங்கர், 41. தமிழ்நாடு கிராம வங்கியில் ஊழியராக, புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளையாபுரம் கிளையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ராதா, ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார். இவர்களுக்கு, 10 மற்றும் 6 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். சி வசங்கர் நீண்ட காலமாக மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை மருத்துவமனைக்கு செல்வதாக இருந்தார். மனைவியும், தன் பெற்றோரை சந்திக்க மகள்களுடன் நாகர்கோவில் சென்று இருந்தார். இந்நிலையில், சிவசங்கர் நேற்று மதியம் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்துார் சென்ற ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசார் விசாரித்தனர்.
22-Jul-2025
17-Jul-2025