உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திருநெல்வேலியில் ஆக.17ல் பா.ஜ., பூத் கமிட்டி மாநாடு

திருநெல்வேலியில் ஆக.17ல் பா.ஜ., பூத் கமிட்டி மாநாடு

திருநெல்வேலி:திருநெல்வேலியில் ஆக.,17ல் தென் மண்டல பா.ஜ., பூத் கமிட்டி மாநாடு நடக்கிறது. இதில் தேசிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்குட்பட்ட 28 சட்டசபைகளின் பா.ஜ., பூத் கமிட்டி உறுப்பினர்கள் மாநாட்டில் ஒரு லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தச்சநல்லூரில் நடக்கும் மாநாட்டிற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. பின் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆலோசனை நடந்தது. அவர் கூறியதாவது: மண்டல அளவில் பூத் கமிட்டி மாநாடுகளை பா.ஜ., நடத்துகிறது. முதல் மாநாடாக தென் மண்டல பூத் கமிட்டி மாநாடு திருநெல்வேலியில் நடக்கிறது. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இவர்களில் ஒருவர் பங்கேற்பர். தொடர்ந்து அடுத்தடுத்த மண்டல பூத் கமிட்டி மாநாடுகள் நடக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை என்றார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பா.ஜ., நிர்வாகி ஐயப்பன் தேர்தல் பிரசார வாகனம் ஒன்றை கொண்டு வந்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு பிடித்தமான கார் எண் 4777என்ற எண் கொண்ட அந்த பிரசார வாகனத்தை நயினார் நாகேந்திரன் ஓட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி