உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கந்து வட்டி பிரச்னையில் மிரட்டல் பா.ஜ., துணைத்தலைவர் கைது

கந்து வட்டி பிரச்னையில் மிரட்டல் பா.ஜ., துணைத்தலைவர் கைது

திருநெல்வேலி:கந்து வட்டி வாங்கியதோடு வீட்டுக்குள் சென்று மிரட்டல் விடுத்து தாக்குதலில் ஈடுபட்டதாக திருநெல்வேலி பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலி ஜங்ஷன் வீரராகவபுரத்தில் வசிப்பவர் மேகநாதன் 40. வட்டித் தொழில் செய்து வருகிறார்.புது பஸ் ஸ்டாண்ட் சேவியர் காலனியை சேர்ந்த டென்னிசன் 36, என்பவர் மேகநாதனிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். சில மாதங்களாக வட்டி செலுத்த முடியவில்லை. அவரது வீட்டிற்கு சென்று பொருட்களை வெளியே எடுத்து போட்டு தகராறு செய்ததோடு அவரது மனைவி பிரின்சியை, மேகநாதன் அவதுாறாக பேசியுள்ளார். மேலப்பாளையம் போலீசார் மேகநாதன் மீது கந்துவட்டி, பெண் வன்கொடுமை, அவதுாறாக பேசுதல், மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதில் போலீசார் அவரை கைது செய்ததும் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மீது பொய் வழக்கு போடுவதாக தெரிவித்து பா.ஜ.தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மதியம் வரை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததால் நீதிபதி அவரை நேரில் பார்த்து 27ம் தேதி வரை ரிமாண்ட் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை