தண்ணீரில் மூழ்கடித்து கொலை இளம்பெண் உடல் மீட்பு
திருநெல்வேலி:அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணியில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று மீட்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் செல்லையா 31. டிரைவர். இவரது மனைவி காவேரி 30, ஒரு ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடைசி குழந்தை பிறப்புக்குப் பிறகு காவேரி மனநலம் பாதிக்கப்பட்டார். வீட்டில் கணவருடன் அடிக்கடி தகராறு செய்தார். இதனால் ஆத்திரமுற்ற செல்லையா ஆக.,24ல் மனைவியை தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க அழைத்துச் சென்று அங்கு தாக்கி தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்தார். உடலை ஆற்றில் வீசிவிட்டு அம்பாசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தார். மூன்று நாட்களாக அவரது உடலை தீயணைப்பு படையினர் தேடினர். நேற்று காவேரி உடல் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தாய் கொலை வழக்கில் தந்தை சிறைக்கு சென்றதால் 3 குழந்தைகளும் நிராதரவாகியுள்ளனர்.