உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கொலையான பட்டியலின வாலிபர் உடல் ஒப்படைப்பு

கொலையான பட்டியலின வாலிபர் உடல் ஒப்படைப்பு

திருநெல்வேலி:ராதாபுரம் அருகே முன் விரோதத்தில் காரை கொண்டு மோதி கொலை செய்து விட்டு, விபத்து போல் தப்பித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே சங்கநேரியை சேர்ந்தவர் பிரபுதாஸ் 27. பட்டியல் இன வாலிபர். கடந்த 7ம் தேதி அவர் தமிழரசன் என்பவருடன் டூவீலரில் சென்றபோது கார் மோதி ரோட்டோரம் கிடந்தார். கழுத்தில் கத்தி போன்ற ஆயுதத்தால் அறுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஆனால் அதனை விபத்து என தவிர்க்க பார்த்தனர். பின்னர் இது குறித்து விசாரித்த கூடங்குளம் போலீசார் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த வினோத் 42, லிங்கசாமி 23, மகராஜன் 22, அருண்குமார் 21, ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்தனர். ஆனால் முக்கிய குற்றவாளி ஒருவர் இன்னும் சிக்கவில்லை. இருப்பினும் பிரபுதாசின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்கள் பெற்றுச் சென்றனர். இந்த கொலையில் முக்கிய நபரை கைது செய்ய வேண்டும். இரண்டு முறை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற போது இது குறித்து புகார் அளித்தும் விபத்து என கண்டு கொள்ளாமல் விட்ட ராதாபுரம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கேட்டு கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை