உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / டூவீலர் மீது பஸ் மோதல் கல்லுாரி மாணவி பலி

டூவீலர் மீது பஸ் மோதல் கல்லுாரி மாணவி பலி

திருநெல்வேலி,:திருநெல்வேலி ராமையன்பட்டி அருகே வேப்பங்குளத்தை சேர்ந்தவர் பால்துரை. இவரது மனைவி எஸ்தர் மேரி. இவர்களுக்கு நான்கு மகள்கள். 3வது மகள் செல்வம் 19, பெருமாள்புரம் தனியார் பெண்கள் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். திருநெல்வேலி டவுன் மாநகராட்சி பள்ளியில் பயிலும் தங்கை சுதர்சனாவை பஸ்சில் ஏற்றி விடுவதற்காக நேற்று காலை டூவீலரில் ராமையன்பட்டி மெயின் ரோட்டுக்கு அழைத்து வந்தார்.பஸ்சில் ஏற்றி விட்ட பிறகு ரோட்டை டூவீலரில் குறுக்காக கடந்தார். அப்போது திருநெல்வேலியில் இருந்து வந்த தனியார் பஸ் டூவீலர் மீது மோதியது. இதில் பஸ்சின் அடியில் சிக்கிய மாணவி செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தார். மானுார் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ