உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / அரசு பஸ்சில் ஐ.டி. பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: கண்டக்டர் கைது

அரசு பஸ்சில் ஐ.டி. பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: கண்டக்டர் கைது

திருநெல்வேலி:கோவையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு பஸ்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கண்டக்டர் கைது செய்யப்பட்டார். துாத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் கோவையில் ஐ.டி.,நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு கோவையில் அரசு பஸ்சில் திருநெல்வேலி வந்தார். அந்த பஸ்சில் கண்டக்டராக கோவையை சேர்ந்த மகாலிங்கம் 43, பணியில் இருந்தார்.நள்ளிரவில் பஸ் பயணத்தின் போது இளம் பெண்ணின் பின் சீட்டில் அமர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அப்பெண் கண்டித்தும் கண்டக்டர் சில்மிஷத்தை தொடர்ந்தார்.அந்த பெண் திருநெல்வேலியில் உள்ள தமது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். பஸ் அதிகாலை 4:00 மணிக்கு திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தபோது அப்பெண்ணின் உறவினர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் கண்டக்டரை சூழ்ந்து கொண்டனர். அவரை பிடித்து அங்கிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலப்பாளையம் போலீசார் கண்டக்டரை பெண் கொடுமை வழக்கில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ