உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மரங்கள் வெட்டப்பட்டதால் பலியாகும் மான்கள், மயில்கள்

மரங்கள் வெட்டப்பட்டதால் பலியாகும் மான்கள், மயில்கள்

திருநெல்வேலி,:மாறாந்தை அருகே மரங்கள் வெட்டப்பட்டதால் மான்கள், மயில்கள் தொடர்ந்து உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம், மாறாந்தை அருகே கல்லத்திகுளம் பகுதியில் அடர்ந்த பறம்பு நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான மரங்கள் இருந்தன. அங்கு மான்கள், மயில்கள் என பல வன உயிரினங்கள் வசித்தன. இந்நிலம் தனியாருக்கு சொந்தமானது என்பதால், அதை ஒரு தனியார் சோலார் மின் நிறுவனம் வாங்கி சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையம் அமைத்து வருகிறது. இதற்காக அப்பகுதியில் மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டுள்ளன. இதற்கு உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், அரசு மற்றும் வனத்துறை இதை பொருட்படுத்தாததால் மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டன. இதன் விளைவாக, அங்கு வசித்து வந்த மான்கள் தங்கள் வாழ்விடத்தை இழந்து அங்கும், இங்கும் திரிகின்றன. சில மான்கள் மின் வேலியில் சிக்கி இறந்தன; சில மான்கள் நாய்களின் தாக்குதலால் பலியானது. ஒரு மாதத்தில் இதுவரை ஐந்து மான்கள் மற்றும் பல மயில்கள் இறந்துள்ளன. நேற்று ஒரு மான் இறந்தது. மான் உடலை மீட்க வனத்துறையினர் வந்தபோது, உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பகுதி, மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் வரம்புக்குள் வருவதாகவும், அங்கு எந்தவொரு கட்டுமான பணிகளும் மேற்கொள்ள அந்த ஆணையத்தின் அனுமதி அவசியம் என்றும் தெரிவித்தனர். ஆனால், எந்த அனுமதியும் பெறாமல் மரங்கள் வெட்டப்பட்டதாகவும், இது சுற்றுச்சூழல் சட்டங்களை மீறுவதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை