மேலும் செய்திகள்
ஏ.ஐ.யு.டி.யு.சி., தொழிற்சங்க கூட்டம்
26-Dec-2024
திருநெல்வேலி : திருச்செந்துார் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற முருக பக்தர் அருணாசலம், கார் மோதி இறந்தார்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், லட்சுமியாபுரத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் 38.நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். திருச்செந்துார் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றார். சங்கரன்கோவில் -திருநெல்வேலி சாலையில் மானுார் அருகே சென்றபோது நேற்று காலை 6:00 மணிக்கு சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற கார் அருணாசலம் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.கார் டிரைவர் கரிவலம்வந்தநல்லுார் தங்கராஜை 38, மானுார் போலீசார் கைது செய்தனர்.
26-Dec-2024