வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நம்பித் தொலையுங்கள் நாங்கள் மக்களுக்கு நன்மை மட்டுமே செய்யப் பிறந்தவர்கள் என்று.
திருநெல்வேலி;திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் அருகே முக்கிய சாலையை வழிமறித்து தி.மு.க.,வினர் நலத்திட்ட உதவி வழங்க பிரமாண்ட மேடை அமைத்த நிலையில் மழை காரணமாக நிகழ்ச்சி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் அருகே மாநகராட்சியின் ஆர்ச் அருகில் இருந்து இடதுபுறம் தென்காசி செல்லும் புதியசாலைக்கு நெல்லை கண்ணன் சாலை என பெயரிடப்பட்டுள்ளது.வழக்கமாக திருநெல்வேலியில் கட்சியினர் கூட்டம் நடத்துவதற்கு என ஒரு சில இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் முதன்முறையாக பெரிய அளவில் நெல்லை கண்ணன் சாலையை வழிமறித்து தி.மு.க., மேடை அமைத்திருந்தது.இதனால் அங்கு டூவீலர்கள் கூட செல்ல முடியாதபடி இரண்டு நாட்களாக பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.அங்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடத்த போலீசாரிடமோ, வருவாய்த் துறையிலோ எந்த அனுமதியும் பெறப்படவில்லை. வாகனங்கள் அனைத்தும் நெல்லையப்பர் கோயில் கீழரத வீதி வழியாக திருப்பி விடப்பட்டன. பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அந்த மேடையில் நேற்று மாலை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்கும் விழா நடப்பதாக இருந்தது. ஆனால் நேற்று காலையில் இருந்து தொடர் மழை பெய்ததால் அங்கு நிகழ்ச்சி நடத்த முடியவில்லை. மேடைப் பந்தல் பிரிக்கப்பட்டது.மாநகராட்சிக்கு எதிர்புறம் உள்ள ஸ்மார்ட் சிட்டி ட்ரேட் சென்டருக்கு நிகழ்ச்சி மாற்றப்பட்டது.
நம்பித் தொலையுங்கள் நாங்கள் மக்களுக்கு நன்மை மட்டுமே செய்யப் பிறந்தவர்கள் என்று.