தி.மு.க., சேர்மனுக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலர்கள் போர்
திருநெல்வேலி:நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தி.மு.க., சேர்மனுக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலர்கள் உட்பட 13 பேர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர அனுமதிகோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய சேர்மனாக தி.மு.க வை சேர்ந்த சவுமியா உள்ளார். இவரது கணவர் ஆரோக்கிய எட்வின், நாங்குநேரி தி.மு.க., ஒன்றிய செயலர்.சேர்மன் சென்னையிலேயே இருப்பதால் நாங்குநேரிக்கு வருவதில்லை. முறைப்படி கூட்டங்கள் நடத்துவதில்லை என அவருக்கு எதிராக தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிட்ட 13 பேர் நேற்று திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி மனு அளித்தனர்.ஒரு வாரத்தில் பதில் கூறுவதாக கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.